Archives: ஜூன் 2024

இயேசுவில் இளைப்பாறுதலை கண்டடைதல்

இளைப்பாறுதலற்ற ஆத்துமா செல்வத்திலும், வெற்றியிலும் ஒருபோதும் திருப்தியடையாது. ஒரு மரித்துப்போன மேற்கு நாட்டிய இசை ஜாம்பவான் இந்த உண்மைக்குச் சாட்சி. கிட்டத்தட்ட அவரது நாற்பது பாடல் தொகுப்புகளும், பல தனிப்பாடல்களும் பலமுறை விற்பனையில் முதல் பத்து இடங்களைப் பெற்று, வெற்றிகண்டிருந்தார். ஆனால் அவர் பல திருமணங்களைச் செய்து, பலமுறை சிறையிலிருந்தார். அவரது எல்லா சாதனைகளிலும் கூட, அவர் ஒருமுறை, " இசை, திருமணங்கள், அர்த்தங்கள் என்று எதாலும் நான் வெற்றிபெற முடியாத ஒரு அமைதியின்மை என் ஆத்துமாவில் உள்ளது. . . . அது இன்னும் பெரியளவில் இருக்கிறது. அது நான் மரிக்கும் நாள்மட்டும் இருக்கும்" என்று புலம்பினார். அவரது வாழ்க்கை முடிவடைவதற்கு முன்பு அவர் தனது ஆத்துமாவில் இளைப்பாறுதலைக் கண்டிருக்கலாம், துரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.

இந்த இசைக்கலைஞரைப் போலப் பாவத்தாலும், அதன் விளைவுகளாலும் போராடிச் சோர்ந்து போன அனைவரையும் இயேசு தனிப்பட்ட முறையில் தன்னிடம் வரும்படி அழைக்கிறார். அவர், "என்னிடத்தில் வாருங்கள்" (மத்தேயு 11:28) என்கிறார். நாம் இயேசுவிலுள்ள இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும்போது, ​​அவர் நம்மிடமிருந்து பாரங்களை அகற்றி, "நமக்கு இளைப்பாறுதல் அளிப்பார்". நாம் செய்யவேண்டியதெல்லாம் அவரை விசுவாசிப்பதும், அவர் வழங்கும் பரிபூரண வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்வதும் ஆகும் (யோவான் 10:10). கிறிஸ்துவின் சீடத்துவம் எனும் நுகத்தை நாம் ஏற்கும்போது, அதின் விளைவாக நமது "ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல்" (மத்தேயு 11:29) கிடைக்கும் .

நாம் இயேசுவிடம் வரும்போது, ​​​​ அவருக்கு முன்பான நமது பொறுப்புணர்வை அவர் குறைப்பதில்லை. மாறாக அவரில் வாழ்வதற்குப் புதிதானதும், லேசானதுமான சுமையான வழியை வழங்குவதன் மூலம் அவர் நமது அமைதியற்ற ஆத்துமாக்களுக்குச் சமாதானம் தருகிறார். அவர் நமக்கு மெய்யான இளைப்பாறுதல் தருகிறார்.

 

புதிதும், நிச்சயமானதும்

மூன்று ஆண்டுகளாக வீட்டுத் தேவைகளைத் தவிர, கவிதா தனக்காக எதையும் வாங்கவில்லை. கோவிட்-19 பெருந்தொற்று எனது தோழியின் வருமானத்தைப் பாதித்தது, அவள் எளிமையான வாழ்க்கை முறையை தழுவினாள். "ஒரு நாள், எனது வீட்டை சுத்தம் செய்யும் போது, ​​​​எனது பொருட்கள் எவ்வளவு மோசமாகவும், பழையதாகவும் இருப்பதை கவனித்தேன். அப்போதுதான் எனக்கு புதிய பொருட்களின் அருமை புரிந்தது; அவை தரும் புத்துணர்வும் உற்சாக உணர்வும் தனிதான். என் சுற்றுப்புறமே சோர்ந்துபோய் பழையதாக தோன்றியது. எதிர்காலமே இல்லை என்பது போல் உணர்ந்தேன்" என்று பகிர்ந்துகொண்டாள்.

வேதாகமத்தில் உள்ள சற்றே வித்தியாசமான ஒரு புத்தகத்தால் கவிதா உற்சாகம் கொண்டாள்.  எருசலேம் பாபிலோனிடம் வீழ்ந்த பிறகு, எரேமியாவால் எழுதப்பட்ட புலம்பல், தீர்க்கதரிசியும், ஜனங்களும் அனுபவித்த துயரத்தின் ஆறா காயத்தை விவரிக்கிறது. எனினும், துயரத்தின் விரக்தியின் மத்தியிலும், நம்பிக்கைக்கான உறுதியான அடித்தளம் உள்ளது; அது தேவனின் அன்பு. "அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்" (3:22-23) என்று எரேமியா எழுதினார்.

ஒவ்வொரு நாளினூடும் தேவனின் ஆழமான அன்பு எப்பொழுதுமே புதிதாக உண்டாயிருப்பதை கவிதா உணர்ந்தாள் . எதிர்நோக்குவதற்கு இனி எதுவும் இல்லை என்று சூழ்நிலைகள் நம்மை உணர்த்தும்போதும், ​​​​அவருடைய உண்மைத்தன்மையை நாம் சிந்தித்து, அவர் நம்மைப் போஷிப்பதை ஆவலுடன்  எதிர்நோக்கலாம். நம் நம்பிக்கை வீண் போகாது என்பதையறிந்து, நாம் நிச்சயமாகத் தேவனில் நம்பிக்கை கொள்ளலாம் (வ. 24-25). ஏனெனில் அந்த நம்பிக்கை  அவருடைய உறுதியான அன்பாலும், இரக்கத்தாலும் காக்கப்படுகிறது.

"தேவனின் அன்பு எப்படியோ ஒவ்வொரு நாளிலும் எனக்குப் புதிதாயுள்ளது. ஆகவே நான் நம்பிக்கையோடு எதிர்நோக்குவேன்" என்கிறாள் கவிதா.

விடுதலையின் தேவன்

ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைத்தனத்திலிருந்த மக்களை விடுவித்தார் ,எதிரிகளும் சரணடைந்தனர். எனினும் டெக்சாஸ் மாநிலம் அடிமைகளின் சுதந்திரத்தை இன்னும் அறியவில்லை. ஜூன் 19, 1865 அன்று, கோர்டன் கிரேன்ஜர் என்ற இராணுவ தளபதி டெக்சாஸில் உள்ள ஒரு நகரத்திற்குள் நுழைந்து, அடிமைப்படுத்தப்பட்ட அனைத்து நபர்களையும் விடுவிக்குமாறு கட்டளையிட்டார். சுதந்திரத்தின் பிரகடனத்தைக் கேட்டபோது, சங்கிலிகள் அறுந்து. அடிமைத்தனத்திலிருந்தவர்கள் அடைந்த அதிர்ச்சியையும் , மகிழ்ச்சியையும் கற்பனை செய்து பாருங்கள்.

தேவன் ஒடுக்கப்பட்டவர்களைக் காண்கிறார், அநீதியால் நசுக்கப்படுபவர்களுக்கு அவர் மெய்யாகவே விடுதலை அளிப்பார். மோசேயின் காலத்தில் இருந்ததைப் போலவே இப்போதும் அது உண்மையாக இருக்கிறது. எரிகிற முட்செடியிலிருந்து அவசர செய்தியுடன் தேவன் அவனுக்கு வெளிப்பட்டு, "எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து(தேன்)" (யாத்திராகமம் 3:7) என்றார். அவர் இஸ்ரேலுக்கு எதிரான எகிப்தின் மிருகத்தனத்தைப் பார்த்தது மட்டுமன்றி, அதைக்குறித்து ஏதோவொன்று செய்யத் திட்டமிட்டுமிருந்தார். "அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி...நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்" (வ.8) என்று தேவன் முழங்கினார். அவர் இஸ்ரேலுக்குச் சுதந்திரத்தை அறிவிக்கச் சித்தம் கொண்டார். மோசே அவருடைய வாயாக இருப்பார்:"நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன்" (வ.10) என்று தன் ஊழியனிடம் கூறினார்.

தேவனுடைய வேளை நாம் எதிர்பார்ப்பதுபோல விரைவாக வரவில்லை  என்றாலும், ஒரு நாள் அவர் நம்மை எல்லா அடிமைத்தனத்திலிருந்தும், அநீதியிலிருந்தும் விடுவிப்பார். ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் நம்பிக்கையையும். விடுதலையையும் தருகிறார்.

 

தனிமையானவர்க்கு தோழன்

ஹோலி குக், வேலைக்காக லண்டன் சென்றபோது, ஒரு நண்பர் கூட அவளுக்கில்லை. அவளுடைய விடுமுறை நாட்கள் கொடுமையாக இருந்தது. தனிமையுணர்வு உள்ள மக்கள் அதிகமுள்ள நகரங்களில் லண்டன் முன்னிலை வகிக்கிறது. அதின் அண்டை நாடான போர்ச்சுகல் லிஸ்பனில் வசிப்பவர்களில் 10 சதவீதத்துடன் ஒப்பிடும்போது  ​​ 55 சதவீத லண்டன் மக்கள் தாங்கள் தனிமையில் இருப்பதாகக் கூறுவதாக உலகளாவிய கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.

பிறரோடு இணைந்திருக்க, ஹோலி தனது அச்சத்தை விட்டு, தி லண்டன் லோன்லி கேர்ள்ஸ் கிளப் என்ற சமூக ஊடகக் குழுவை உருவாக்கினாள், அதில் சுமார் முப்பத்தைந்தாயிரம் பேர் சேர்ந்துள்ளனர். சில வாரங்களுக்கு ஒருமுறை சிறிய குழுக்களாகச் சந்தித்து பூங்காக்களைச் சுற்றிப்பார்த்தல், கலைப் பாடங்கள், ஆபரணங்கள் வடிவமைத்தல், இரவு உணவுகள் மற்றும் நாய்க்குட்டிகளுடன் வெளிப்புற உடற்பயிற்சி வகுப்புகள் போன்றவற்றைச் செய்கின்றனர்.

தனிமையென்னும் போராட்டம் புதிதல்ல, தனிமையுணர்வுக்கான பரிகாரியும் புதியவரல்ல. நமது அனாதி தேவன், "தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்" (சங்கீதம் 68:6) என்று தாவீது எழுதினார். கிறிஸ்துவைப் போன்ற நண்பர்களுக்கு நேராக நம்மை நடத்தும்படி தேவனிடம் கேட்பது ஒரு பரிசுத்த பாக்கியம், எனவே நாம் அவரிடம் தாராளமாக இந்த வேண்டுகோளை எடுத்துச்செல்லலாம். அவர், "தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்" (வ. 5) என்றும், தாவீது, "எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே" (வ.19) என்றும் சொல்கிறார்.

இயேசு நமக்கு எவ்வளவு நல்ல நண்பர்! ஒவ்வொரு கணமும் தம்முடைய மகிமையான பிரசன்னத்தில் தொடங்கி அவர் நம்மோடு என்றென்றும் இருக்கும் நண்பர்களைத் தருகிறார். ஹோலி சொல்வது போல், "நண்பர்களுடனான நேரம் மனதுக்கு உகந்தது"